அவன் இவன்

ஒருவனை
பணக்காரன் என்றனர்
ஒருவனை
ஏழை என்றனர்

அவன்
மாளிகையில் வாழ்ந்தான்
இவன்
மண்குடிசையில் வாழ்ந்தான்...

அவன்
பால் குடித்தான்
இவன்
கூழ் குடித்தான்...

அவன்
பட்டாடை உடுத்தினான்
இவன்
பருத்தியாடை உடுத்தினான்...

அவன்
காரில் போனான்
இவன்
காலில் போனான்...

அவன்
ஒரு நாள் இறந்தான்
இவன்
ஒரு நாள் இறந்தான்

அட....!
இப்போது
இருவரையும்
'பிணம்' என்றே!
அழைக்கின்றனர்.....

-கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (4-May-18, 5:17 pm)
Tanglish : avan ivan
பார்வை : 63

மேலே