நழுவாத நிஜங்கள்

சிந்தாத வண்ணங்கள்
அழகானவை
சிதறாத எண்ணங்கள்
நிதானமவை

கலையாத கனவுகள்
நனவானவை
தொலையாத பாசங்கள்
உறவானவை

அன்பான பார்வைகள்
பொன் போன்றவை
நீங்காத நினைவுகள்
நிழல் போன்றவை

தேடாத செல்வங்கள்
சேராதவை
வாடாத நெஞ்சங்கள்
வருந்தாதவை

எழுதாத சொற்கள்
ஏடற்றவை
வழுவாத வார்த்தைகள்
கல்வெட்டுக்களாம்

எழுதியவர் : பாத்திமாமலர் (4-May-18, 2:15 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 194

மேலே