உயிரே

உயிரை உருவி கொடுக்கிறேன்,
நெஞ்சை பிளந்து காட்டுகிறேன்,
உள்ளே இருப்பது நீதானே,
உன்னாலே நானும் வாழுகிறேன்.

காலம் கடந்து போகிறதே,
காற்றும் உன்பெயர் சொல்லியதே,
கனவில் நீ வந்து போகத்தான்,
கவலைகள் அனைத்தும் தொலைக்கிறேன்.

தனிமை என்னை கொல்லுகிறதே,
கண்ணீர் நதியாய் வழிகின்றதே,
துணையாக உன்னையே தேடினேன்,
உன் நினைவை தூவிசென்றாயே.

மழையாக என்னில் பொழிந்தாயே,
இந்த பாலையையும் பூக்கச்செய்தாயே,
உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்,
சொர்க்கம் கண்முன் தோன்றுதடி.

உன்னை சுற்றி சுற்றி வந்தேனே,
சுமையையும் சுகமாய் ஏற்றேனே,
உன் சொல்லில் என் வாழ்க்கையடி,
நான் செத்தாலும் உனக்காக இருப்பேனடி.

கனவில் உன்னை காண்பேனே,
உன் நினைவை இழந்தால் இறப்பேனே,
நிழலாய் உன்னை தொடர்ந்து நான்,
என்றும் துணையாகவே இருப்பேனே.

துயிலும் எண்ணம் எனக்கில்லை,
தூது அனுப்பவும் வழியில்லை,
உன் கண்களை காண வருவேனே,
என் காதலை பரிசாக தருவேனே.

உன்னை எண்ணி எண்ண ஏங்கினேன்,
ஏக்கம் தாளாமல் தவிக்கிறேன்,
என் துயரம் துடைத்திட நீ வந்தால்,
தோல்விகள் தொலைத்தே தேறிடுவேன்.

எழுதியவர் : கார்த்திக் கு (4-May-18, 6:09 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : uyire
பார்வை : 458

மேலே