வழிதெரியாத பயணங்கள்

எதிலும் தன்னிச்சை
நிர்ணயங்கள்
இந்த வழி தெரியாத
பயணங்கள்
வாழும் மொழியறியாத
சயனங்கள்
இரு விழிகள் இல்லாத
நயணங்கள்

நம்பிக்கை தொடுக்கும்
தோரணங்கள்
நெஞ்சில் நிரம்பி வழியும்
சலனங்கள்
மீள போராடி போடும்
கரணங்கள்
கடைசிவரை மிஞ்சாத
கோவணங்கள்

சாதிக்க சாத்தியமில்லா
சாதனைகள்
தோதுக்கு தோதாக முயல
வேதனைகள்
காதுக்குள் நுழைந்திடாத
போதனைகள்
வாழ்வில் மறைந்திருக்கும்
நூதனங்கள்

விதியின் விளையாட்டின்
ஆவணங்கள்
பொருக்க வொன்னாத
ஏளணங்கள்
கடவுளின் காலடியில்
சரணங்கள்
இலக்கை அடைந்திடாத
மரணங்கள்

பாவத்திற்கு ஆளாக்கும்
சகுணங்கள்
பாரச்சுமையை சுமக்கும்
தருணங்கள்
இங்கணம் சில இடர்களே
காரணங்கள்
நீடூழிவாழ "வழி தெரியாத
பயணங்கள்"
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
வழிதெரியாத பயணங்கள்
கவிதைமணியில்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (5-May-18, 2:32 pm)
பார்வை : 119

மேலே