புதையல்
இயற்கையின் விதியின் வசத்தால்
ஏற்படும் மாற்றங்களால் தேசங்களோ
நாடுகளோ நகரங்களோ
ஊர்களோ
புதையுண்டு சிலகாலங் களுக்குப்பின்
தன்னிச் சையாக வேறு
ஆராய்ச்சியால்
தோண்டியெடுக்க ஒரு இரக "புதையல்"
அதுமட்டுமல்லாது பற்பல
பேராசைக்
காரர்கள் ஏழை எளியோர்
வாயடித்து
வயிற்றிலடித்து வசதியை
பெருக்கி
மிச்சத்தை பதுக்கி வைக்க
ஆளுமையின்
அதிரடியால் ஆணிவேரை ஆட்டிஅசக்கி
நோண்டி எடுக்க மறு இரக
"புதையல்"
ஒன்று சரித்திர கையை பிடிக்கிறது
ஒன்று தரித்திர கையை பிடிக்கிறது
ஆச்சர்யம் அதிர்ச்சி தரும்
"புதையல்"
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
புதையல்
கவிதைமணியில்