சாதிமதமில்லா மனம் வேண்டும்
சூரியன் சாதிமதம் பார்த்து உதயமாவதில்லை
சந்திரன் சாதிமதம் பார்த்து வெளிச்சம் தருவதில்லை
காற்றும் சாதிமதம் பார்த்து வீசுவதில்லை
கடல் அலைகளும் சாதிமதம் பார்த்து அடிப்பதில்லை - ஆனால்
மனிதன் மட்டும் சாதிமதமாய் பிரிந்து வாழ்வது ஏன்
அனைவருக்கும் ஓர் உடல் ஓர் உயிர் தான் உள்ளது - ஆனால்
மனம் தான் மாறுபாட்டை காட்டுகிறது
அனைவருக்கும் மலர்களாய் மனங்கள் மாறிவிட்டால்
சாதி மத பூக்கள் இந்த பூவியில் பூக்காமல்
எங்கும் புன்னகை பூக்களாய் இந்த பூமி பூத்துக்குலுக்கும்!!!