சித்தி

முதல் முறையாக நான் பல்நிலாவை பூமியில் பார்கிறேன்
ரோஜா இதழ்களை விட மென்மையான உன் மேனியை ரசிக்கிறேன்
புல்லாங்குழலின் இசையை விட மெல்லிய பூ உன் சத்தத்தை கேட்கிறேன்
அன்னையின் தலாட்டை விட இரவிலும் பாடும் உன் பாட்டை விரும்புகிறேன்
மயில்கள் ஆடலை விட தத்தி நடக்கும் உன் நடனத்தால் நெகிழ்ச்சியடைகிறேன்
குயில்களின் பாடலை விட அம்மா என அழைக்கும் உன் குரலில் ஆனந்தமடைகிறேன்
அழகிய பூவே என் வாழ்க்கையில் வந்த அதிசய பொக்கிஷம் நீ
அக்காவின் பிள்ளையாக நீ இருந்தாலும்
சித்தி என நீ கூறும் ஒரு சொல் போதுமே அமிர்தமாய்i இனிக்கும்
என் வாழ்நாள் முழுவதும் அது எனக்கு
அன்பே நீ அகிலத்தின் அனைத்தையும் கேட்டாலும்
அன்பாய் உனக்கு வாங்கி தருவேன்
கண்ணே நீ கண்கலங்காமல் என் வாழ்நாள் வரை
உன்னை பாசத்துடன் பார்த்துக்கொள்வேன்
என்னவளின் வயிற்றில் பிறந்திருந்தாலும் நீயும் என் பிள்ளைதான்
சித்தி என நீ என்னை அழைத்தாலும் நானும் உனக்கொரு அன்னைதான்
anbal unnai endrum aravanaithu kathuikkoilven en sellame
தங்கமான உன்னை இப்பொழுதே எனக்கு பொக்கிஷமாய் கொடுத்ததற்கு
கடவுளுக்கு நான் காலம் உள்ளவரை நன்றி செலுத்துவேன்!!!

எழுதியவர் : M Chermalatha (6-May-18, 5:48 pm)
சேர்த்தது : M Chermalatha
Tanglish : chithi
பார்வை : 4015

மேலே