© ம. ரமேஷ் லிமரைக்கூ 10
•தினை விதைத்தேன்
உரமிட்டு களையைக் கூடப் பறித்தேன்
வினையை அறுவடை செய்தேன்
•ஐணகனமன பாடியது
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்
அரசியல்வாதி கொட்டாவி விட்டது
•சோர்ந்து விழுந்தேன்
பாவம் அவள் தூக்கிவிட வந்தாள்
காதலிக்க ஆரம்பித்தேன்
•காக்கை குருவி எங்கள் சாதி
சரி பாரதி மனிதரில் அவை
எந்தச் சாதி?