நண்பனும் நீ எதிரியும் நீ

உன் அருகில்
நான் வரும் போது
சீறிப் பாய்ந்து
என்னை ஓட விடும்
என் எதிரி நீ.
ஆனால்
என் அருகில் வந்து
என் கால்களை
மலர்கள் முத்தம் இடுவது போல்
நுரைகளால் வருடும்
என் நண்பன் நீ..
ஒரு நொடியில்
என் நண்பனும் நீ
என் எதிரியும் நீ.....
- கடல் அலை