சிறகடிக்கும் விழிகள்

சிந்தையில் நிறைந்த சிங்கார சிலையே
சிறகடிக்கும் விழிகள் மயக்குது என்னை
சிதறியது நெஞ்சும் கண்டதும் உன்னை
வதனத்தின் வார்ப்பு வையத்தை ஈர்க்கும்
அதரத்தின் அழகால் உமிழ்நீரும் சுரக்கும்
உன்னெழில் வீழ்த்தும் உலகை நிச்சயம் !
பழனி குமார்