அன்னை
![](https://eluthu.com/images/loading.gif)
மண்ணிலே பூத்த தாரகையிவள்
தன் கருவறையை எனக்கு பஞ்சு
மெத்தையாக்கியவள்.......
தொப்புள் கொடியை தன் பாசக்
கொடியாய் காத்தவள்.......
தன் குருதியை பாலாக்கி எனக்கு
அமுதழித்த அன்னப்பூரணியிவள்.........
வெயிலிலும் மழையிலும் தன் சேலை
முந்தனையை குடையாக்கியவள்........
தன் வயிற்றுப் பசியை மறைத்து
என் பசி தீர்த்தவள்.......
எனக்கு இன்னொரு ஜென்மம்
எல்லாம் வேண்டாம் - இந்த
ஜென்மத்தில் நீ வாழும் வரை
ஒரு சொட்டு கண்ணீர் - கூட
வராமல் இருந்தால் போதும்......
உன்னை பல்லாக்கில் தாங்க
முடியாவிட்டாலும் என் வீட்டு
ராணியாய் உன்னை வாழ
வைப்பேன்.......
அதற்கு இந்த பிறவி ஒன்றே
போதும்........