இரவின் மடியில்

***************************
இரவின் மடியில்
***************************

வலிகள் உணரவில்லை...
மொழிகள் அறியவில்லை...
கண்ணீர் சிந்தியதில்லை...
காயம் கண்டதில்லை...
வெயிலில் காய்ந்ததில்லை..
மழையில் நனைந்ததில்லை..
பனிகுளிரில் பதுங்கியதில்லை...
மணற்கற்களில் நடந்ததில்லை...
"என் தாயின் கருவறையில்,
உறங்கிய பொழுது!!!!! "

துன்பம் தொடவில்லை..
துக்கம்கிட்ட நெருங்கவில்லை...
பசியில் நொந்ததில்லை...
பாரமென்று ஒன்றுமில்லை...
அன்பிற்கு எல்லையில்லை...
பாசத்திற்கு பஞ்சமில்லை...
செல்வங்களைத் தேடவில்லை..
பாதுகாப்பு தேவையில்லை....
"என் தாயின் மடியில்....
உறங்கும் பொழுது!!!! "

அன்று ,
கருவறையில் சுமந்தாள்....
பின்பு,
மடியினில் சுமந்தாள்.....
இன்று,
தோளினில் சுமக்கின்றாள்....
என்றும்,
மனதினில் சுமப்பாள்.....
சுமையாக அல்ல....
இன்பமாய்...இறையாய்...!!!!

தங்கப்பொருட்கள் வேண்டாம்,
என்னைத் தாங்கும் ,
தாயவள் போதும்!!!
செல்வங்கள் வேண்டாம்...
என் செல்லமே என என்னைக்
கொஞ்சும் தாயவள் போதும்!!!!
பஞ்சுமெத்தை , தலையணை வேண்டாம்...
என்னைச் சுமக்கும்
அவள் தோள் போதும்!!!!
அவளைவிட்டுப் பிரியும் நிலை வந்தால்
அவள் நினைவோடு மடிவேன்......
இரவின் மடியில்....!!!

எழுதியவர் : பானுமதி.மா. (9-May-18, 11:24 am)
சேர்த்தது : பானுமதி
Tanglish : iravin madiyil
பார்வை : 856
மேலே