சொல்ல நினைக்கும் கதை 3

மதியின் நிலை அறிந்தும் அறியாமல் தன் அம்மாவின் அறிவுரையை ஏற்றும் ஏற்காமல் அமைதியாய் இருந்தார். அச்சமயம் இருவரின் நிலையும் பதில் பேச முடியாத நிலையில் இருந்தது.மதி பட்டம் இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்க அரசு வேலை தேடி கொண்டிருந்தான்.
மீண்டும் அந்த நாள் முதல் மதியும் அரசும் தங்கள் காதலை வீட்டில் சொல்லி சம்மதம் பெற்ற பின்னே
தங்கள் திருமணம் என முடிவு எடுத்து
கொண்டனர்.
இறுதி ஆண்டு கல்லூரியில் அவள் பிரிவில் ஒரு செய்முறை விழா வந்தது.அதில் மிகவும் வேகமாக தங்கள் தோழியுடன் சேர்ந்து தயார்
படுத்தி அந்த விழாவில் கலந்து கொண்டாள்.அன்று இரவு அவள் அரசை பார்க்க வேண்டும்.அரசிடம் பேச ஆசை பட்டாள்.
பின் இருவரும் முடிவு எடுத்து அன்று விழா முடிந்ததும் சந்தித்து கொண்டனர்.ஒரு பொது இடத்தில்,
அவனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க நினைத்த முகம், என் வாழ் நாள் முழுவதும் பார்க்க வேண்டிய முகம்.சிதரிக்கும் கற்பனையில் வாழ்ந்த முகம்.
என் கற்பனையில் மிதந்து பேச வேண்டிய வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொண்டு மனம் முழுவதும் சந்தோஷத்துடன் கல்லூரி வாசலை விட்டு வெளியே வந்தாள்.
தோழி கூட வர அவளும் அரசு இருக்கும் இடத்தை நெருங்க நெருங்க அவள் பார்வை அவனை தேட ஆரம்பித்தது.
பின் அரசை பார்த்தால் முதலில் அடையாளம் கண்டு கொள்ள பிறகு அவனை கண்களால் பேச தொடங்கினாள். இருவரும் கண்களால் பேச மௌனம் நீடித்தது..

எழுதியவர் : உமா மணி படைப்பு (10-May-18, 11:07 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 88

மேலே