பாற்கடல்
துன்புறுத்தப்பட்ட
பாம்பின் கண்ணீர்
அமுதத்தில் வீழ்ந்ததில்
விஷமாய்த் தவிர்க்கப்பட்டது
பாம்பு.
பிற உயிர்களை
வதைப்பவர்கள் என்பதால்
அசுரர்களுக்கான அமுதம்
அங்கீகரிக்கப்படவில்லை.
பாம்பின் வலியை
பொருட்படுத்தாத தேவர்களுக்கு
அமுதத்தைக் கிடைக்கச் செய்த
கடவுளின் விஷமத்தில்
சாக்கடையானது பாற்கடல்.
_/_/