வர்ணம்

வெண்படலம் மீது
பால் ஆடை போற்றிய பண்டம் !

பூபாலம் மீது வீசிய
பூவிதம் வாசம் கண்ட மரங்கள் !

பழுத்த மாங்கனியாய் மனம்
ஆசையால் நிரம்புகிறது ஆசை காதலினால் !

பருவம் தாண்டிய மங்கையின்
வலி, விழி வழி காணா நெருப்பு !

கனி நிறைந்த காவி
எட்டாக் கனியாய் கண்ட சிறை !

நீர் சேர்ந்த தொகுப்பின்
நிறை மாத காவியம் ஊடல் !

பெண் திருமேனி கண்ட
கவிதை மலைகடலாய் பாடும் அழகினை !

பூக்கள் கண்ணீர் அடர்த்தி
உடல் கண்ட தொடர் நலம் !

பட்டை தீட்டலின் முன்பாதி
கச்சா எண்ணையின் பின்பாதி
இரண்டின் கலவையாய் இவள் மீதி !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சிங்கா (10-May-18, 5:10 pm)
Tanglish : varnam
பார்வை : 307

மேலே