இயற்கையின் கீதம்
காற்று நம்மோடு பேசும்போது
கடலலையும் பேசுகிறது
காற்றின் கீதம் காதில் மோத
அலையின் இரைச்சல் நுரையுடன்
காலில் சும்மா முட்டி மோத
மகிழ்ச்சி பொங்க மக்களின்
ஆர்ப்பாட்டமான குரல்களின் ஓசை
கடலின் கரையில் கும்மாளம்தான்
காலாற நடந்து செல்ல
களம் இறங்கும் தளம் கரையோரம்
அதுவே ஆரவாரம் உற்சாகம் பொங்கும்
இன்னிசை கரையோரமாக மாறி
ஒரு இசைக்கச்சேரி வழங்கும் உன்னத
அழகிய கரை மேடையாக
ஆறுதலும் அரவணைப்பும்
அன்பான சுகமும் ஆடல் பாடலும்
அள்ளி அள்ளி கொடுக்கும் இயற்கையாகி
இன்பத்தை எல்லாரும் அனுபவிக்க
அள்ளித் தரும் வள்ளலாக மாறுகிறது
வாஞ்சை கொண்ட மக்கள் விரும்பும்
இன்ப நிலமே இசைபாடும் கடற்கரை
இன்று நேற்றல்ல இயற்கையின் செழிப்பும்
மக்கள் பரிமளிப்பின் ஊற்றும் அதுவாகும்