விளைநிலம்

வியர்வை ஓடும் விளைநிலம் //விலையில்லா உணவளிக்கும் உறைவிடம் /
விவசாயி உள்ளவரை காத்திருக்கும் விளைநிலம்//
விட்டு கொடுக்க முடியாத கற்பகம்//
விழி மூடி மௌனமாய்
விலைகொடுத்து வாங்க வேண்டாமே//

உயிர்கள் உண்டாக பெண்மைகள் இல்லை என்றால் //
உனக்கும் அழகான உயிர்
கிடைத்துவிடுமா//
உணவு உண்டாக விளைநிலம் இல்லையென்றால்//
உன் வாழ்வும் நிலைத்துவிடுமா//

வீணான விதண்டா வாதம் மென//
விலகியே போவீர்கள் எனில்//
விரைவிலேயே வந்துவிடும் பட்டினி//

இருளில்லா வாழ்வுக்காய் இன்றே செயல்படுவோம்//
ஓங்கியே உலகமெங்கும் வறுமை நீங்கட்டும்

எழுதியவர் : அகிலன் ராஜா (11-May-18, 11:34 pm)
Tanglish : vilainilam
பார்வை : 141

மேலே