புதுப்பிலாக்கணம்
அந்த முற்றத்து பனைவேயலருகே,
சிறுவர் சிறுமியர்கள்
விளையாடிக் கொண்டிருந்தார்கள், ஒற்றைச்சங்கும், சாவு மணியும்,
அங்கிருப்போரின்
பிலாக்கணம் முறித்து,
ராகமே தெரியாத,
புதுப்பிலாக்கணம்
எழுதிக் கொண்டிருந்தன ....
கோபித்துவிட்டு,
எதற்கோ பிரிந்துபோனவளை, கைத்தாங்கலாக
அழைத்துவந்தார்கள்...
வார்த்தைகளே இன்றி
தத்தளித்த உதடுகளால்,
தீக்கிரையானவனை,
முத்தமிடுகிறாள்,
கண்மூடி பிரார்த்திக்கிறாள்,
"என்னை மறக்காத உன்னை
மறந்ததற்கு
என்னை மன்னித்துவிடு"
அனுசரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
