அன்பு
மழை பெய்யும் காலத்தில்
நனைந்து வரும் என்னை திட்டாமல்
மழை வாங்கும் திட்டுகள் அம்மாவின் அன்பு....
என்னை அடித்துவிட்டு இருளில் விளக்கனைத்து விசும்பி அழும் அப்பாவின் கண்ணீர் அன்பு...
தலையில் குட்டி சண்டை இட்ட பிறகும்
எனக்கான பங்கை எடுத்து வைக்கும் தங்கையின் தாராளம் அன்பு...
பேசி கொண்டதே இல்லையென்றாலும்
ஒருவரிடமும் விட்டு கொடுக்காத தம்பியின் பெருமிதம் அன்பு...
ஆண் பிள்ளை என்று அப்பத்தா தரும் கூடுதல் ஐந்து ரூபாயில் கோடி அன்பு...
தேவை இருப்பினும் தேவை இல்லை என்று விட்டுக்கொடுக்கும் நண்பனின் ஈகை அன்பு...
இரண்டு நிமிட மௌனத்தில் காதலனை வெல்லும் காதலியின் கோபம் அன்பு...
எத்தனை உறவுகள் மேல் வைத்தாலும் வாசம் மாறா நேசம் அன்பு...
ஏதோ ஒரு வலியை...
ஏதோ ஒரு சுமையை...
யாரிடமும் பகிறாமல் உள்ளுக்குள் புழுங்கி அழும் ஆழம் அன்பு...
சிலரிடம் மட்டும் சொல்ல தோன்றும்
ரகசியங்களும் அன்பு...
பேரதிசயங்களும் அன்பு...