பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீ அழுத நாள் கண்டு
உன் தாய் சிரித்த நாள்
சின்னஞ்சிறு உருவாய்
கள்ளம்கபடம் இல்லா கருவாய்
மண்ணில் தோன்றிய சிசுவாய்
அவள் கையில் உன்னை அள்ளிக்கொள்ள
அவள் மூச்சி காற்று உன்னில் மோதிட
பூமிக்கு வந்த உயிரே
உன்னை ஈன்றிட
அவள் வலி கொண்டால்
அவள் மார் மெத்தையாக்கி
அவள் மடி தொட்டிலாக்கி
உன்னை சிலையாய் செதுக்கி
இன்று உன் புன்னகை கண்டு
அவள் வயிற் குளிர்வாள்
நீ மென்மேலும் சாதித்து
அவள் பட்ட வலிகள் போக்கிட சொல்கிறேன்
அன்போடு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா ...