பேனா
ஒவ்வொரு பேனாவிலும்
மைத்துளிகள் நிரப்பட்டிருக்கலாம்
ஆனால் ஓர் கவிஞனின் பேனாவில்
மட்டும்தான் உயிர்துளிகள் நிரப்பட்டிருக்கிறது
உயிரின் துளிகள்
ஒவ்வொரு முறையும் செதுக்கப்படும்போது
உணர்ச்சியின் எழுச்சியாய் மாறி
பேரலைகளின் கொந்தளிப்பாய் உருவாகி
ஓர் புதுமையை தந்துவிட்டு
செல்கின்றது !!!!!!!!