காதல் குளம்

காதல் குளத்தில்
மலர்ந்திருக்கும் தாமரை நீ
படிக்கட்டில் அமர்ந்துன்னை
ரசிக்கும் சூரியன் நான்!
உன்னைக் கண்டதும்
கால்கள் நடக்க மறுக்கும்
தரை தட்டி நிற்கும்
படகைப் போல்!
நீ நடக்க உன் பின்னால்
நான் நடக்க என்
மனதிற்குள்
கவிதை நடை பிறக்கிறது!
படுத்து கண்களை மூடியதும்
வந்துவிடுகிறாய் கனவாக!
இரவானதும் உதித்திடும்
பால் நிலவைப்போல்!
தாகம் என உன்னிடம்
தண்ணீர் கேட்டேன்!நீயோ
கண்ணீரைக் குடிக்க
சொல்கிறாய்!