அம்மா கீர்த்தனைகள்
வர்ணம்
1. இராகம் மோகனம் தாளம்: ஆதி
பல்லவி
அம்மா நின் அருளைத் தந்திடு
அடைக்கலம் நின் மலர் பாத கமலங்கள்
அனுதினம் உனைத் தொழுதிட மனம் இனித்திடும்
அருள் கமழ் உந்தன் புகழ்மொழி தன்னைப் பாடினேன்
அனுபல்லவி
தித்திக்கும் உன் திரு நாமம்
தினம் தினம் இசைத்திட சுகம் பெருகிடுமே
திருவடி மலர் தினம் தொழுதிட அருள்வாய்
தீந்தமிழ் ஸ்வரத்தால் உனை நான் தொழுவேன்
;
முக்தாயி ஸ்வரம்
காரிக ரிஸரி ஸரி ஸ்கரிக ஸரிஸத
ஸரிகரி கப கப தாபா
கபதப தஸரிக ரீக ஸாரி தாஸ பாத ஸரிகஸா
தபா கரிஸரி
சரணம்
மாறா அன்புடை தெய்வம் நீயே
மகிமை மிகும் மலர்விழி திறந்தருள் புரி
சிட்டை ஸவரங்கள்
1. கா ரிஸரீ தாரீதஸா ரீகாரி (மாறா அன்புடை)
2. காகரி கரிஸரி காகப ததஸரி
காகக தபகரி காகஸ தபகரி (மாறா அன்புடை)
3. பாதத பாகரி ஸாரிக ரீஸத
ஸாரிக பாதா ஸஸா தபாகரி (மாறா அன்புடை)
4. ஸாரிக ரிஸரிஸ தஸதப கரிஸரி ஸா
ஸாஸஸ ரிரிகக பபதத
ஸரிகரிகரி தஸரிஸரிஸ பதஸதஸத
கபதபதப ரிஸதப கரிஸரி (மாறா அன்புடை)
கீர்த்தனைகள்
1. (கலைகள் எல்லாம் அள்ளித் தருபவளே மெட்டு)
பல்லவி
கலைகள் எல்லம் அள்ளித் தருபவளே -இளம்
கன்னித் தமிழாய் திகழ்பவளே நல்ல (கலைகள்)
அனு பல்லவி
புலமை பல தந்தே பாடவைத்தாய் - பணிந்தே
பூவை உந்தனைப் போற்றவத்தாய் (கலைகள்)
சரணம்
வீணையின் ஸவரமாய் நீயிருந்தே - பல
வியக்கும் ராகங்களை இசைக்க வைத்தாய்
வா வா அமுதத் தேனே -எனக்கு
வற்றா கல்வி செல்வம் தருவாய் (கலைகள்)
-----------------------