அம்மா கீர்த்தனைகள் தொடர்ச்சி

2. சரஸ்வதி ந்மோஸ்துதே (மெட்டு)
இராகம் சரஸ்வதி
தாளம்: ரூபகம்
பல்லவி
பதமலர் நம்பி வந்தேன்
பண்புடனே போற்றி உன் இரு (பதமலர்)
அநு பல்லவி

கவின்மிகு பாமாலை சூட்டி என்றும்
கலை எழில் குணவதி என்றும் உன் (பதமலர்)
சிட்டை ஸவரம்
ஸாரிம பதாப மபதஸ
பதஸா நிதபம ரிஸநித
ஸரிமப தஸரிமா ரிஸரி
தபமா ரிஸரி ஸஸநித (பதமலர்)
சரணம்
வரமதை தர கரமாமலர்
சிரமதில் வைத்தே காத்தருள்வாய்
புறமகம் எங்கும் உனைப் போற்றினேன்(2)
வரவேண்சடும் என் அன்னை நீயே (பதமலர்)
(மீண்டும் சிட்டை ஸவரம் பாடி முடிக்கவும்)
---------------------------------
3 விநாயகனே வினை தீர்ப்பவனே (மெட்டு)
ஸ்லோகம்
புகழ்பாடி உந்தனையே நாள்தோறும் போற்றிடுவேன் ;
பாமாலை தனை சூட்டி பூமாறி பொழிந்திடுவேன்
மஹாஜனநீ மகிழ்ந்ததனைக் கேட்டருள்வாய் தாயே;
மனதாறப் பணிந்தேன் அதை ஏற்றருள்வாய் நீயே
பாடல்
பல்லவி
மஹாஜனநீ உன் மகிமையை இசைப்பேன்
மாதா உந்தனின் புகழினைப் போற்றி நான் (மஹாஜனநீ)
அநு பல்லவி
பதாம் புஜத்தைப் பணிந்தேன் நானே..... ஆ.... ஆ.... (2)
பாடல் இசைத்தே பண்புடன் நாளும் (மஹாஜனநீ)
சரணம்
சதா உந்தன் நினைவே தாயே
ஜய ஜக ஜனநீ ஜயமே தந்திடும் (சதா)
ஜகன் நாயகியே நீயே அம்மா...ஆ......
ஜய போற்றி உன் மலர்த்தாள் போற்றி (மஹாஜனநீ)
-------------------
4 கணநாயகனே கருணாகரனே மெட்டு
ஸ்லோகம்
சங்கடம் போக்குவாய் சக்தி ஸ்வரூபிணியே
சஞ்சலம் தீர்த்தே சந்ததம் காத்திடும்
மங்கள வடிவே -உன்;
மலரடி பணின்தேன்
பாடல்
பல்லவி
நலம் யாவையுமே தினமே நல்கும்
கலைமேவிடும் என் எழில் தாய் நீயே (நலம்)
அநு பல்லவி
மணியும் நீயே... ஒளியும் நீயே...
மலரும் நீயே... மணமும் நீயே.. (நலம்)
சரணம்;
அகில உலகும் போற்றிடும் தெய்வமே
அடிமலர் பணிந்தே நாளுமே ஏத்தினேன்
அனுதினம் காத்தே அரவணைதிடுவாய்
என் அன்னை நீயே.. அருளுடன் நாளும்.. ((நலம்))
-------------------
5. சோபில்லு சப்தஸ்வர (மெட்டு)
பல்லவி
வாராயோ... வந்தருள்தர... (வாராயோ)
அநு பல்லவி
நாடி தினம் போற்றிடுவேன்
நலம் யாவும் பெற்றுயர (வாராயோ);
சரணம்
தாயே தயை செய்தருள்வாய்
தளரா மனம் தந்தருள்வாய்
தருணம் எனைக் காத்திடவே;
தாள் மலரடிப் போற்றி நின்றேன் (வாராயோ)
-------------------------------
6. சிவ ராம கிருஷ்ணா - (ராக மாலிகை)
ஆலாபனை வரிகள்
நமோ..... மாத......சரணம்
வருவாய்... வந்தருள்வாய்.... அம்மா....
நீயே......
நமோ...... ஜய ஜய நமோ.....
பாதாரம் பணிந்தேத்தி பூமாலை தினம் சாற்றி........
தொழுவேன் எந்தன்... அன்னை உன்னை நானே.....
பாடல்
சரணாகதம் போற்றும்
எனைக் கண் பாராய் நீயே.....
சரணம் அம்மா... தாயே விரைந்தருள் (சரணாகதம்)
பைந்தமிழ் பாவாலே பாமாலை தினம் சூட்டி
பதமலர் போற்றியே நான் மகிழ்ந்திடுவேன்
பாமகள், பூமகள், நாமகள் நீயே....
மரகத வடிவமே என் தாயே சரணம் (சரணாகதம்)
காரண காரியம் யாவுமாய் திகழும்
பூரண ஜோதியே பொன்னடி போற்றி
புவிமீதிலே புகழோடு நான்
தினம் வாழ அருள் செய்யும் தாய் நீயம்மா
சரன் நாடினேன் கதிநீயென்றே
காத்தருள் செய்திடும் அருளன்னையே (சரணாகதம்)
கண்கண்ட தெய்வமே காத்தருள் புரிவாய்
காருண்ய வடிவே காலமும் பனிவேன்
குறைகளைப் போக்கியே நல்லருள் புரிவாய்
திருவடி சரணம் திவ்ய ஸவரூபியே (சரணாகதம்)
மத்யம காலம்
பத்ம பாதமே பணிவுடன் ஏத்துவேன்
பாமலர்ய் சூட்டியே பூமழைப் பொழிவேன்;.
பவவினைப் போக்கியே பரிவுடன் காப்பாய் (சரணாகதம்)
-----------------

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்ஷ்மி (15-May-18, 3:55 pm)
பார்வை : 122

மேலே