ஒரு கிராமத்து பையன்
ஆரம்பம் என்னவோ ஆரவாரம்தான் எல்லா குழந்தைகளைப் போல.
அழகான கிராமம்...
சுற்றித் திரிய சீமக்கருவேல காடுகள்....
குளிக்க கிணறு கண்மாய் என பல.....
என்னிப்பார்க்கையில் ஏனோ உதடு விரிகிறது.
அரசு உதவிபெறும் பள்ளியில் ஆரம்ப கல்வி. சராசரி மாணவனாய்.....
தீடீர் உறவுகளின் வருகையால் ஓடி ஒளிந்து ....
பசி மறந்த நாள்கள் ஏராளம்.
கோவில் முற்றம் , மணல் குவியலில் உறங்கிய இரவுகள் எண்ணில் அடங்காதவை.
ஒட்டாத உடன்பிறப்பு,
கோடை விடுமுறையில் பட்டாசு குழாய் உருட்டி சில நாட்கள் ....
மாமா வீட்டில் சில நாள்கள்....
ஊர் திருவிழாவில் உப்பு மிளகு வியாபரி.....
கிணற்றில் விழுந்து உயிர் தப்பியதை நினைத்து பார்க்கையில் நெஞ்சில் நினைவுகள் தான் மிச்சம்.
மேல்நிலைப்பள்ளி நகரத்தில்.
காலை 7 மணி பேருந்தில்
தொடங்கி இரவு 10 மணிக்கு வீடு திரும்புதல்.... நினைத்தாலே கண்களில் வருகிறது இரத்த கண்ணீர்.
எப்போது வரும் விடுமுறை
ஊர் ஊராய் சுற்றித்திரிய ....
தேர்வு நேரங்களில் புளியமரம் உச்சியில். ,எஞ்சிய நேரங்களில் காடு மேடு.
12 ஆம் வகுப்பில் தோல்வி நிச்சயம் என்று இருந்த வேளையில் இறைவன் அருளால் வெற்றி
புரட்டி போட்டது வாழ்க்கையை.
உயர்கல்வி குட்டி ஜப்பானில். என்னுள் மாற்றம் , முதல் முதலாய் உயர்கல்வியில் ஆரம்பக் கல்வி .
முடிந்தது உயர்கல்வி
மாநிலம் மாநிலமாய் சிலவருடம். புரிந்தது வாழ்க்கை .
இன்று.....
ஆசிரியராய் ..
நன்றி மறவா மகனாய்.... பாசமுள்ள கணவனாய்..... அன்பான தந்தையாய்..... சுயனலமில்ல உடன்பிறப்பாய்.... உண்மையான நண்பனாய்.....
சமுக பற்றாளானாய் .... என் குக்கிராமத்து நினைவுகளுடன்.