நேற்று இன்று நாளை

நேற்றைய தலைமுறை நெற்பயிர்களுடன் வாழ்ந்தது
இன்றைய தலைமுறை நெற்பயிர்களை அழித்தது
நாளைய தலைமுறை நெற்பயிர்களை தேடி ஆராய்ச்சி செய்யும்

நேற்றைய தலைமுறை ஆடு மாடுகளை வளர்த்தது
இன்றைய தலைமுறை ஆடு மாடுகளை வளர்க்க மனதில்லாதிருக்கிறது
நாளைய தலைமுறை ஆடு மாடுகளை அருங்காட்சியகத்தில் தான் பார்க்கும்

நேற்றைய தலைமுறை வனங்களை பாதுகாத்தது
இன்றைய தலைமுறை வனங்களை அழித்தது
நாளைய தலைமுறை வனங்களை செயற்கையாய் வளர்க்கும் வழியை தேடும்

நேற்றைய தலைமுறை தண்ணீருக்காக கிணறுகளை வெட்டியது
இன்றைய தலைமுறை இருப்பிடத்திற்க்காக கிணறுகளை மூடியது
நாளைய தலைமுறை தண்ணீரினை வெளீநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்

இன்றைய தலைமுறையில் உருவாக்குவது தான்
நாளைய தலைமுறைக்கு ஆதாரமாகும்
இன்றைய தலைமுறையில் எல்லா வளங்களையும் அழித்துவிட்டால்
நாளைய தலைமுறை எப்படி வாழும்

முந்தைய தலைமுறையினர் நம்மைப்போல் வளங்களை அளித்திருந்தால்
நாம் இப்பொழுது வாழ முடியுமோ ?
சிந்தியுங்கள் மனிதர்களே
நமக்காக மட்டும் வாழாமல் நாளைய தலைமுறையும்
நன்றாக வாழ வேண்டும் என எண்ணுவோம்
இனிமேலும் இயற்கை வளங்களை அழிக்காமல் பாதுகாப்போம்
நாளைய தலைமுறைக்கு எல்லா வளங்களையும் கொடுத்து
நாம் வாழ்வதோடு நாளைய தலைமுறையையும்
இனிதாய் வாழ வைப்போம் !!!

எழுதியவர் : M Chermalatha (16-May-18, 12:00 pm)
Tanglish : netru indru naalai
பார்வை : 454

மேலே