கற்பு, அன்று, இன்று -குமுறுது நெஞ்சம்

வஞ்சகத்தால் சகுனியின் சூதில்
வீழ்ந்தனர் பஞ்சபாண்டவர்கள்
துரியோதனனுடன் ஆடிய சூதாட்டத்தில்
பாஞ்சாலியை பணயம் வைக்க
ஆட்டத்தில், அவளை இழக்க
அரச சபையில் வீற்றிருந்தோர்
அனைவர் முன்னிலையில் துச்சாதனன்
பாஞ்சாலியின் துகில் உரிக்க , அவள்
கதற, அன்று ட்வபர யுகத்தில் அது
'அவன் காதில் விழ, ' திரௌபதி
கற்பு காக்கப் படுகிறது...அது அந்தக்
காலம்

கலியுகத்தில்...............
நம் நாட்டில், நமது பாரத நாட்டில்
உள் நாட்டில் நாம் நமக்குள் ஒற்றுமை
இழக்க, பேரரசுகள் சிதற, சிற்றரசுகள்
தலைத்தூக்க, பொறாமை தலைதூக்க
காட்டிக்கொடுக்கும் ஈனர்கள் பெருகிட
எங்கிருந்தோ வந்தார்கள் 'சுனாமிபோல்'
படையெடுத்து அந்நியர்கள், கஜானி,
கோரி, கில்ஜி என்று இவர்கள்,நலிந்த
நம் நாட்டை சூறையாடி, பெண்களின்
கற்பழிப்பை காளியாட்டமாய் நடத்த
கற்பழிக்கப்பட்ட பெண்கள் கூக்குரல்,
அலறல்கள், மரண ஒலி கோட்டைகளின்
மதில் சுவரில் பட்டு 'அவல
எதிரொலிகள்'- இன்றும் அந்த
கோட்டைகளை பார்க்க வருவோர்க்கு
ஒரு சலனம் தருகிறதே............
(mass destruction and unhindered rape
of innocent women in thousands!)

இவையெல்லாம் நடந்து யுகம் மாறி
வருடங்கள் ஆயிரம் ஆகியும்
பரிணாம வளர்ச்சியில் மனிதனின்
கற்றோரே உணர்ச்சிகள் இன்னும்
மனிதனை மிருகமாய் தான் ஆட்டி
வைக்கிறதோ, இன்றைய நாட்களில்
உலகம் முழுவதும் பரவலாய்
இருக்கும் பெண்மையை இழிவு
படுத்தும் ஆண்மை, கற்பழிப்பு ...

'மனிதன் விடுதலை அடைந்தான்
ஆனால் எங்கும் அவன் சங்கிலியில்'
என்றான் பிரென்ச் தத்துவ மேதை,
ஆம் இது இன்றும் பொருந்தும்,
இன்றைய பெண் உரிமைகள் பல
பெற்றும், ஓர் அடிமையாகவே
பெரும்பான்மை மக்களிடையே
இருக்கின்றாள்........
பெண்ணை, பெண்ணை மதித்து,
தெய்வமாய், தாயாய் நினைத்து
வாழ்ந்தால் மட்டுமே அவள் வாழ
முடியும், அவள் வாழ்ந்தால்தான்
உலகுய்யும்......................

பெண்ணைக் காப்போம், கற்பழிப்பை
அறவே ஒழிப்போம்.........கற்பழிப்பு
கொலைக்கு சமம்.........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-May-18, 10:06 am)
பார்வை : 62

மேலே