நோக்கம் சிறக்க
வளர்ந்து வந்த நோக்கம்
காக்க வேண்டும் நன்னெறி
வளர்த்து வந்த நோக்கம்
காண வேண்டும் பண்பு
செல்ல வேண்டும் தூரம்
சொல்ல வேண்டும் ஊக்கம்
வெல்ல வேண்டும் நோக்கம்
வல்ல ஞானம் கொண்டு
தொல்லை இன்றி செல்ல
இல்லை பகைமை இல்லை
இனிய வாழ்வை சுவைக்க
இயலும் உன்னால் இயலும்
பிறந்து வந்த நோக்கம்
சிறக்க சிறந்து வாழு
மழலை என்ற மகுடம் வென்று
மனிதம் வென்ற மனிதனாய்
வளர வளர வாழ்த்தும்
உற்ற சுற்றம் வேண்டும்
உத்தமனாய் உன்னைக் காண
உலகம் கண்டு வியக்கும்
வளர்ந்த நோக்கம் கண்டுவிடு
வளர்த்த நோக்கம் களிகூர விடு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
