கொஞ்சிக் குலவும் குளிர்ந்து

நெஞ்சில் சுமந்த நினைவுகளின் சாரலில்
பஞ்சாய் மனமும் பறக்கும் முகிலிடையில்
சஞ்சல மின்றித் தனிமை யினிமையென
மஞ்சள் நிலவுடன் மௌனக் கதைபேசி
வஞ்சி யவளும் வரும்வரைக் காத்திருந்துக்
கொஞ்சிக் குலவும் குளிர்ந்து.

(ஒரு விகற்ப பஃறொடை வெண்பா)

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-May-18, 12:31 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 74

மேலே