நீ பிறந்த நாள் முதல்
நீ பிறந்த நாள் முதல்
சிப்பிக்குள் நீர் புகுந்து
பிறந்த முத்தானேன்
சிற்பிக்குள் கள் புகுந்து
சிறந்த பித்தானேன்
தாமரை இலை மேல்
நழுவும் துளி ஆனேன்
திராட்சை குலை மேல்
தழுவும் கிளி ஆனேன்
புயலாய் பிறந்தவன்
கடற்கரை காற்றானேன்
புல்லாய் கிடந்தவன்
தென்னங் கீற்றானேன்
இமையை திறந்தால்
விழி இருக்கும்
இந்த
உமையை திறந்தால்
நீ இருப்பாய்