மே பதினெட்டு

அன்று அதிகாலை முதல் ஒரு தேசம் தீயில் எரிந்து காெண்டிருநதது
பிணக்குவியல்களைக் கடந்து எஞ்சிய உயிர்கள் நடந்து சென்றது
பசித்தவர் வாய்களுக்குள் துப்பாக்கிச் சன்னங்கள் ஊடுருவிப் பாய்ந்தது
கூப்பிய கரங்கள் கட்டப்பட்டது
கதறிய குரல்கள் நசுக்கப்பட்டது
காமப் பேய்கள் பிணங்களையும் ருசித்தது
தமிழன் என்ற அடையாளம் இரத்தத்தில் சரிதம் எழுதியது
பிஞ்சு கூட கருவில் கருகி சாம்பலானது
அங்காென்றும் இங்காென்றும் அங்கங்கள் சிதைந்து கிடந்தது
அந்த நாள் இன்று "மே பதினெட்டு"

இன்னும் எம் விழிகளின் ஈரம் காயவில்லை
இரத்த வாடை இன்னும் சுவாசத்தை நீங்கவில்லை
இரந்து கேட்டும் பதிலில்லை
இழந்த பின் கேட்டும் பயனில்லை
இது தான் தலை விதி என்று கடைசி மூச்சு காத்திருக்கிறது
இழந்தது பாேதும் ஆறுவது எப்பாேது என்று?

"மே பதினெட்டு" தேகம் சிலிர்க்கிறது
அந்த நாளின் நிமிடங்கள் அழியாத வடுவாகி
இன்றும் நினைவாேடு நெஞ்சமதில் காயமாய்
இரத்தக் கண்ணீர் வடிக்கிறது யாரறிவார்?
அத்தனை சாெந்தங்களையும் நெஞ்சில் இருத்தி
கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்
"மே பதினெட்டு" இன்றைய நாளில்......

எழுதியவர் : அபி றாெஸ்னி (18-May-18, 8:03 am)
சேர்த்தது : Roshni Abi
Tanglish : maay pathinettu
பார்வை : 152

மேலே