அவ்வளவுதான் மிக எளிது

அன்றுதான் தொலைந்தேன்
என்றாலும் உறுதியில்லை
ஆனால் தொலைந்தேன்.
இங்கிதமற்ற கனவொன்றில்
முருங்கைமரம் தீ கொள்ள
விழித்த கணம் முதல் இல்லை.
பார்ப்போரிடம் சொன்னேன்
அங்க அடையாளங்கள்...
இந்தக்கவிதையின்
நினைவுச்சிடுக்குகளில்
இருக்கலாம் நான் நீங்களாக...
கண்டால் சொல்லுங்கள்.
நூல் எழுதுபவன்
கனவு தின்பவன்
ஓசைகளில் கொடுக்கு எடுப்பவன்
நகரங்களின் மழை
தவறி விழுந்த சிற்றுண்டி
தபேலா இசை...
மாறி மாறி தெரிவேன்.
நான் என் கூடாரத்தில்
விளக்கை பார்த்து கொண்டிருக்கிறேன்
அந்த விட்டில்கள் ஒற்றர்கள்...
உங்கள் ஆன்மாவை
நம்பகமாய் திருடும்.
நீங்கள் தொலைந்தால்
நான் அறிவேன் எளிதாக.
கூடாரம் நீங்கள்
வாழும் பொந்தில் நிதானமாய்
கிழக்கு திசையில் உள்ளது.

எழுதியவர் : ஸ்பரிசன் (17-May-18, 7:09 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 143

மேலே