உருமாறும்
கை பிடித்த
கணவனின் கைகளில்
கட்டுண்டு கிடக்கும்
காதல் மனைவிபோல
விரல்களில் அடங்கி
இதழ் பதிக்கும்
இன்பம் தரும்
மோகத்தில் சூடேற்றும்,
போதையில் மயங்க வைத்து
கள்வனைப்போல்—நலத்தைக்
களவாடும்
சாம்பலாக உருமாறும்
சாவதற்கு வழிகாட்டும்
இந்த ஆறாவது விரலாட்டம்
அணையாத சிகரெட்டு