வாழிய வாழிய செந்தமிழ் நாடு

வங்கம் ஒருபுறம் அங்கம் தழுவிட
எங்கும் மறுபுறம் தொடர்மலை சூழ்ந்திட
சங்கமப் பெருங்கடல் திருவடி வருடிட - ஓங்கும்
தக்காண மேடையிலே தமிழன்னை வீற்றிருந்தாள்....

காவிரி வைகை பாலாறு
தாயவள் மேனியின் இயற்கூறு
ஐவகை நிலங்கள் அவளது ஆடை - ஏற்ற
ஐம்பெரும் காப்பியம் அவளது கொடை

நாடக இயலிசை உணர்மொழி
நற்றமிழே அவள் உயிர்மொழி
கொற்றவை குணநலன் பேரொளி - பெற்ற
நற்றாய் புதல்வர்கள் போராளி

வாழிய வாழிய செந்தமிழ் நாடு
வாழிய தமிழினம் பலகோடி நூற்றாண்டு!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (19-May-18, 3:10 pm)
பார்வை : 62

மேலே