நீங்கள்
கயிறு இழுப்புப் போட்டியில்
எந்தப் பக்கமும் சாயவில்லை
கயிறு அறுந்தது.
ஆளுக்கொரு பக்கமானது
உங்கள் வாழ்வு.
நியாயங்கள்
ஒருபுறம் கிடக்கட்டும்.
வெறுப்பின் உச்சத்திலா?
மையத்திலா? கொஞ்சம் போலவா?
தெரியவில்லை,
ஆனால் விலகினீர்கள்.
விழுந்த விரிசலை
காலத்தால் நீட்டித்தீர்கள்.
இரண்டு பிள்ளை பெற்றீர்கள்.
உங்கள் காமமும் நிஜம்.
கோபமும் நிஜம்.
காதல்
வற்றிய நதியாய்
விரிந்து கிடக்கிறது.

