நம்பிக்கை மனிதர்கள் 3 - அ அருள்மொழி

அ. அருள்மொழி - A . Arulmozhi

சேலத்தில் பிறந்த இவர் , திராவிட இயக்கத்தில் பற்று கொண்ட , தமிழ் புலவரான தன் தந்தையால் தமிழ் பற்றுடன், திராவிடப் பாரம்பரியத்தையும் கற்று வளர்ந்தவர் . மிகச்சிறு வயதிலேயே மேடைகளில் பேச்சாளராக தொடங்கிய இவர் பெண்கள் எனில் பக்தி , சினிமா , அழகு என்று இருந்த பிம்பத்தை உடைத்து பகுத்தறிவு , நாத்திகம் , பெண்ணியம் , கடவுள் மறுப்பு , ஜாதி மறுப்பு என்று மாறுபட்ட தளங்களில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர் .

தனது கல்லூரி காலத்தில் இருந்து போராட்டக்களத்தில் இருக்கும் இவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் , திராவிடர் கழக பிரசாரச் செயலாளர் . சமூக ஆர்வலர் , ஈழப்பிரச்சனை பற்றி தொடர்ந்து மேடைகளில் , பொதுக்கூட்டங்களில் குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர் . பெண்களின் உரிமைக்காகவும் , பெண்கள் மீதான அடக்குமுறைக்கும் தொடர்ந்து போராடும் சமூகப் போராளி .

சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு தயங்காமல் தன் கருத்துக்களை முன் வைப்பவர் , பெண்ணியம் சார்ந்த பயிற்சிப் பட்டறைகளில் கருத்தாளராக தொடர்ந்து செயலாற்றும் இவர் , தொழில் முறையாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக கடந்த இருவத்தியெட்டு ஆண்டுகளாக அரசியில் அமைப்புச் சட்டம் , சிவில் வழக்குகள் , திருமண சார்ந்த வழக்குகள் போன்றவற்றில் வாதாடி வருபவர் .

நினைவாற்றலுடன் சரளமாக அழகு தமிழில் பேசுவது , தீர்க்கமான வாதங்களை முன் வைக்கும் போதும் அதில் இழையோடும் நகைச்சுவை , ரசனை , அலங்காரப் பேச்சுகளாய் இல்லாமல் முரண்பாடு இல்லாத, சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் இல்லாத மக்களுக்கு புரியும் படி எளிமையான பாணியாக இருப்பது இவரது பேச்சுக்களின் சிறப்பம்சம் .

பள்ளி வயதில் இருந்தே பேச்சுப்போட்டிகளில் நூற்றுக்கணக்கான பரிசுகளை பெற்றவர் , தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்றவர் . பாரதிதாசனின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ள இவர் இலக்கிய மேடைகளில் தவறாமல் இடம்பெறும் இலக்கிய ஆளுமை

எழுதியவர் : பாவி (19-May-18, 11:59 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 733

மேலே