நலம் வாழ என்நாளும்

தாயின் மென் ஸ்பரிசம்
தந்தையின் ஆசை வருடல்
கொஞ்சிப்பேசிய கொஞ்ச காலம்
அஞ்சிநடந்த சிறு நடை
சிரிப்பின் இடை அழுகை
உறக்கத்தில் உளறிய இரவுகள்
கைகலப்பில் முடிந்த போராட்டம்
சண்டையில் மலரும் சிநேகம்
மழலையை நினைவூட்டும் தினம்
மலரும் நினைவுகளாய் தொடர

நிலவில் பாட்டிவடை சுட்ட நம்பிக்கை
சாமி கண்குத்துமோனு பயந்த பேதமை
பூச்சிகாரனுக்கு பயந்த அப்பாவித்தனம்
ஆமை முயலை வென்ற ஓட்டம்
சிங்கத்தை மீட்ட சுண்டெலியின் நட்பு
தாகத்தில் காடெங்கும் அலைந்த காகம்
இன்னும் கேட்டு மறந்த கதைகள் எத்தனை?

இளமையில் தோழன் தோள் கொண்டு
இணைந்தே பல இடர்கள் வென்று
பொய் மெய் பற்பல பேசி
காதலும் காமமும் குறுக்கிட்ட காலத்தை
இதமாய் அசைபோடும் இனிய தருணம்

உடலும் உள்ளமும் என்றும் பதினாறாய்
உழைப்பிலும் தழைப்பிலும் வெற்றிக் கண்டு
இல்லறம் நல்லறமாய் என்றும் சிறக்க
முதுமை முத்தமிட இளமை ததும்ப
பதினாறும் பெற்று பெருவாழ்வு கண்டு
பல்லாண்டு நீவீர் வாழ வாழ்த்துகிறேன்

எழுதியவர் : அருண்மொழி (20-May-18, 4:42 pm)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 2665

மேலே