எனக்கேது காதல்

எனக்கேது காதல்?

அவள் கை பற்றாத போதெல்லாம் என் கை நடுங்குவது குளிரில்தானே?
நானென்ன காதல் படுவேனா?
அவள் இதழ் ஈரம் இல்லாத போது என் இதழ் உலர்வது தாகந்தானே?
நானென்ன காதல் ஜாதியா?
அவள் தொடாத போது என் தோள்கள் துவள்வது ஆடையின் சுமையல்லவா?
என்னைப் பார்த்துக் காதல் பட்டாயா என்றாளே?
என் நாவில் வேறு பெயர் வராதது என் கல்விக் குறைதானே?
எனக்கெப்படிக் காதல் வரும்?
அவளைக் காணும் போது நான் கண் இமைக்காதது எனக்குக்
காதலென்றாளே அந்த ஆச்சர்யம்தானே?
காதல் மட்டும் படுவேனா என்ன?
என் காதில் அவள் குரல் மட்டும் கேட்பது ஊராரின் ப்ரமையன்றி
எனக்கென்ன காதலா வரும்?
அவள் இடைக்கு இடையூறு என்றுதானே உடை குறைக்கச் சொன்னேன்?
காதலெல்லாம் சும்மா என்பேன் !
மின்னியதும் அணைத்தேனே !அச்சப் படுவாளே என்றுதானே?
அவள் கண் சிமிட்டவும் அணைத்தேனே! மின்னுகிறதே இடிக்குமே
அஞ்சுவாளே என்றுதானே?
அவள் கூந்தலை முகர்ந்து பேச்சின்றி இருந்தேனே!
அது இயற்கை மணமா என்ற ஆராய்ச்சிதானே?
அவள் வாயின் மேல் வாய் வைத்து உறிஞ்சியது
அவள் வார்த்தை நயம் எனக்கும் வருமோ என்ற சபலம்தானே?
இன்று அவள் பிரிந்த நேரம் மூச்சின்றி நான் ஜடமானதேன் ?
அவள் தூரச் சென்ற நேரம் துடிப்பின்றி நெஞ்சம் நின்றதேன்?
அவள் நினைவு உயிரானதேன்?அவள் நெருக்கம் மட்டும் வாழ்வானதேன்?
காதலோ என்று இன்று ஐயமானதே உடலுக்கு.
உயிரைத் தருவாளா ? காதலிக்க வேண்டும்!!!

எழுதியவர் : திருத்தக்கன் (20-May-18, 7:43 pm)
சேர்த்தது : திருத்தக்கன்
Tanglish : enakkethu kaadhal
பார்வை : 236

மேலே