என்னத்த சொல்ல
டேய்! இந்த போண்ண நேற்று தானடா வேறு ஒருத்தங்கூட பைக்கில் போறத பார்த்தேன். இப்போ இவன் கூட வாரா.
டேய் மச்சி! யாரையும் தப்பா பேசாதடா. அது அவளோட அண்ணனா இருக்கும்.
சரியென்று நானும் விட்டுட்டேன்.
மூன்று கழித்து நல்லவனாட்டம் பேசிக் கொண்டிருந்த என் நண்பன் அதை பொண்ண பைக்கில கூட்டிட்டு வந்தான்.
என்னடானு கேட்டேன்.
நாங்க காதலிக்கிறோம் என்றான்.
அடுத்த மூன்று நாட்களில் கதை மாறியது.
அவள் வேறு ஒருவருக்கு தன் காதலை தந்து பைக்கிள் சென்றாள்.
அந்த நண்பன் அழுகிறான் என்னிடம்.
என்னத்தச் சொல்ல?
சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை.