சமையலறை

எங்க தாத்தா பேரு குப்பன். அவரோட நினைவா எனக்கு 'குப்பன்' -ன்னு பேரு வச்சுட்டாங்க. இந்த 'ன்'-னுல முடியற பேரெல்லாம் மரியாதைக்குறைவா தெரியுது. வட நாட்டுக்காரங்க பாரு பேருல மரியாதையக் குறிக்க டெண்டுல்கர், அக்கர்கர்னு வச்சுக்குறாங்க.
😊😊😊
அப்ப நீ உம் பேர 'குப்பர்'-ன்னு மாத்திக்கடா.
😊😊😊😊😊
ஏன்டா நீங்க எல்லாம் நரேசு, சுரேசு, சுவ்வாதி, சுவ்வேதா-ன்னு இந்திப் பேர வச்சுக்கவீங்க. எனக்கு மட்டும் எதுக்கடா தமிழ்ப் பேரு. நீ தான் ஏதோ கொஞ்சம் இந்தி தெரிஞ்சவன். நம்ம ஊரு சனங்கெல்லாம் உன்னக் கேட்டுத்தான் அவுங்க புள்ளைங்களுக்கு இந்திப் பேர வைக்கறாங்க. ஏன்டா புச்சுக்கரு (புஷ்கர்) நீயே எனக்கு ஒரு இந்திப் பேர வையுடா. எனக்கு 'குப்பன்'-னும் வேண்டாம் 'குப்பர்'-ரும் வேண்டாம்.
😊😊😊😊
சரிடா குப்பர்ஜி. இனிமேல் உம் பேரு 'கிஷன்'.
😊😊😊😊
என்னது, எம் பேரு கிச்சனா? ஏன்டா படிச்ச சனங்க சமையல் அறையைத்தான்டா கிச்சன் -ன்னு சொல்லறாங்க. அப்ப, எம் பேரு சமையல் அறையா?
😊😊😊😊😊
அடே மடையா குப்பர்ஜி, கிச்சன் இல்லடா. கிஷன். அது கிருஷ்ண பரமாத்வாவக் குறிக்கிற பேருடா.
😊😊😊😊
என்னது கிச்சன் சாமி பேரா? நம்ம ஊரு சனங்க என்னயக் 'கிச்சன், கிச்சன்' -னுதானே கூப்புடுவாங்க. சின்னப் பசங்க அதைக் காதில கேட்டா "அதோ பாருங்கடா, சமையல் அறை வருது" -ன்னு சொல்லி என்னயக் கிண்டல் பண்ணுவாங்கடா புச்சுக்கரு.
😊😊😊
அப்பா குப்பர்ஜி உனக்கு என்னால இந்திப் பேரெல்லாம் வைக்க முடியாது. இந்தி தொலைக்காட்சித் தொடரைப் பாத்து நீயே உனக்கு ஒரு இந்திப் பேரத் தேர்ந்தெடு. நான் வர்றன்டா குப்பர்ஜி. மன்னிக்கவும் குப்பர்சி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.
தமிழுணர்வை வளர்க்க
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●◆◆௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰

எழுதியவர் : மலர் (21-May-18, 8:57 am)
பார்வை : 132

மேலே