வயக்காட்டு வெண்ணிலா
வரப்பு தான் தெரிகையிலே
கஞ்சி கொண்டு போறவளே
என் நெஞ்சமெல்லாம் ஏங்குதடி
உன் பிஞ்சி முகத்தை பார்க்கையிலே
கம்மங்கஞ்சி கருவாடு
உன் தூக்கு சட்டியில் தான் மனக்க
எச்சில் தான் சுரக்குதடி
உன் சமையல் சுண்டி இழுக்குதடி
கிழிஞ்ச சேலை நீ உடுத்தி
உன் காலுல முள்ளு தச்சு
வாடிய மலராய் போகையிலே
என் இதயம் தான் துடுக்குதடி
மஞ்சள் அரைச்சி பூசிக்கிட்டு
கூரசீல உடுத்திகிட்டு
வயக்காட்டில் நீ வேலைசெய்ய
வெண்ணிலாவும் தோற்றதடி
என்னவளே உன் பிறை முகத்தின் அழகிலே ...