மட மனசாட்சி

கோரைப்பற்க்கள்
கூரிய நகங்கள்
நீளமான நாக்கு;
எப்படி இருப்பாய் நீ..?
நானென கண்ணாடிகள்
சம்பவிக்கும் உருவத்தை
ஒத்து அழகாக இருப்பாயோ...!
உருவமற்ற உணர முடிந்த
காற்றைப்போல்
எங்கும் இருப்பாயா...?
இல்லை என்னுள் மட்டுமா...
இரக்கம் சுமந்து
என்னை இம்சிக்கிறாய்...
பாசம் சுமந்து
என்னை படுத்துகிறாய்...
காதல் சுமந்து
என்னை கடுக்கிறாய்...
சமத்துவம் சுமந்து
என்னை சரிக்கிறாய்...
இவ்வளவையும் கொணர்ந்து
கண்களில் வழியாத
என் கண்ணீரை
உள்ளிருந்தே குடித்து
உன் தாகம் தீர்க்கிறாய்...
மட நெஞ்சே!
உறக்கமற்ற இரவுகள்தனில்
உண்மையும் உணர்வுமற்று
இருந்து விட்டால்
வலிக்காது
தெறியுமா உனக்கு...
எங்கேனும் மொழிதெறியா
ஊரில் உன்னை
தொலைக்க வேண்டும்;
வழிகேட்டு வந்துவிட்டாயெனில்
நான் என்ன செய்வது..?

எழுதியவர் : சுரேஷ் குமார் (21-May-18, 11:49 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : mada manasaatchi
பார்வை : 394

மேலே