கொங்கு வட்டார அகராதி
![](https://eluthu.com/images/loading.gif)
கொங்கு வட்டார அகராதி
வந்துட்டோமுங்க, வந்துட்டோமுங்க,
கொங்குத்தமிழோடு வந்துட்டோமுங்க…
குசும்பு புடுச்ச பசங்க நாங்க,
மருவாதெ தொரிஞ்ச மனுசர் நாங்க…
மல்லுவேட்டி கட்டுவோமுங்க,,
மாப்பளை என முறையோடு போசுறோமுங்க…
அறியாத பெண்னை கூட,
ஏங்க அம்மனி, என்னங்க அம்மனி என கூப்பிடுறோமுங்க..
மல்லுக்கட்டும் குழந்தையக் கூட,
ஏன்கண்ணு, என்ன கண்ணு என கொஞ்சுறோமுங்க..
தெரியாத ஆளைக் கூட,
வாங்கண்ண, வணகங்ண்ணா என உபசரிப்போமுங்க…
கூன் விழுந்த பாட்டியையும்,
ஏனுங்க அப்பத்தா, சௌக்கியமா என விசாரிப்போமுங்க…
எங்க ஊரு அம்மணிங்க,
மச்சான்டார், கொலுந்தனார் என முறைவைச்சு பேசுவாங்க..
வட்டலுன்னு சொல்லுவோமுங்க,
அதுல வவுறுறார விருந்தோம்பல் செய்றோமுங்க …
வேசக்காலத்துல உப்புசமுன்னு சொல்றோமுங்க,
எரவாரம் ஏரிபோய் ஏகமாக பேசுறோமுங்க ...
பொறந்தவளபாக்க போனா சீர்கொண்டு போறோமுங்க...
பொறந்தவன் சீர் தந்தான் என ஊர் புரா சொல்லுறோமுங்க …
வாழ்ந்தோமுங்க, வாழ்ந்தோமுங்க
கொங்குத் தமிழோடு வாழறோமுங்க !!!!
உங்கள்
தௌபீஃக்