பொருத்தம் நல்லாத்தான் இருக்கு

மாப்பிள்ளையின் உயரம் ?

ஆறடி!

பொண்ணோட உயரம்?

ஐந்தரை அடி!

மாப்பிள்ளையின் நிறம்?

மாநிறம்!

பொண்ணோட நிறம்?

மாம்பழ நிறம்!

மாப்பிள்ளை குடும்பம்?

பணக்கார குடும்பந்தான்!

பொண்ணோட குடும்பம்?

கொஞ்சம் நடுத்தரம்!

மாப்பிள்ளை என்ன பண்றார்?

அவருக்கு தொழில்தாங்க!

பொண்ணு என்ன பண்ணுது?

அரசாங்க உயரதிகாரிங்க!

மாப்பிள்ளை என்ன சாதி?

என்னங்க இது மேல்சாதிதான்!

ஆனா பொண்ணு கீழ்சாதியாச்சுங்களே!

இந்த காலத்துல மேல்சாதியாவது,
கீழ்சாதியாவது!

பாருங்க
ரெண்டுபேருக்கும்
பொருத்தம் நல்லாத்தாங்க
இருக்கு!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (22-May-18, 12:44 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 58

மேலே