மகளென பிறந்தாய்

உதிரத்தில் உருவாகி
உயிராக உருமாறி
உறவென வந்த உயிரே..!
காத்திருந்தேன்
பத்தாம் மாதத்திற்காய்
கைசேர்த்தாய்
எட்டாம் மாதத்தில்
பொறுத்திருக்க
பழக்கமில்லை
நீயும் என்னை போல..!
அழுகுரல் தந்து
அறிமுகம் கொண்டாய்
ஆனந்தம் இதுவெனும்
அனுபவம் தந்தாய்…!
மகளென பிறந்தாய்
மனமதை கவர்ந்தாய்
மதியதில் நிறைந்தாய்…!!
கர்வங்கள் கரைந்தது
கண்ணீரென வழிந்தது
கண்ணே உன்னை
கையில் ஏந்திட…!
வாழ்ந்திருப்பேன்
வாழ்க்கை முழுதும்
வளமாய் நீயும்
உயர்ந்து வாழ்ந்திட…..!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்