போராடுவோம்

போராடுவோம் நம்
உரிமையை மீட்க
போராடுவோம்!

அறத்தையும்
அகிம்சையையும்
நாங்கள் கையில்
எடுத்தோம்!
பிரம்பையும்
துப்பாக்கியையும்
நீங்கள் கையில்
கொண்டீர்கள்!

எங்களின்
உணர்வை மதியுங்கள்
என்றோம்!
உயிரையல்லவா
எடுத்தீர்கள்!

ஓட்டு போட்ட எங்களை
ஓட ஓட விரட்டுகிறீர்!
ஜனநாயக நாடா?இது
பணநாயக நாடா?

மரங்களை வெட்டுவதே
குற்றம் என்கின்ற
நாட்டில்தான் மனிதர்களையும்
மனிதம்களையும்
சுடுவது குற்றமற்ற
செயலாகுவதை பாரீர்!

போராடுவோம் நம்
உரிமைகளைமீட்க
ஒன்றினைந்து
போராடுவோம்!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (24-May-18, 12:51 pm)
பார்வை : 118

மேலே