காதல்

இரவின் பனிதூறலோடு
தொடரும் இந்த பயணம்
என் கைகள் உன்னை
தட்டிவிடும்போது தோன்றியது
யாரிடமும் பழகாத
நான் மட்டும்
உன்னிடம் பழகியது
ஏனென்று தெரியவில்லை
முன்ஜென்ம உறவா
என்று எண்ணினேன்
நீ எனக்கு
தோழனாக கிடைத்தது
நான் உன்
தோழியாக வந்ததை எண்ணி
தொடருமா இந்த பயணம்
தோல் மீது சாயும்
தோழனாக மட்டுமல்ல
வாழ்க்கை என்ற பூசோலையிலும்
கை கோர்த்து நடக்கும்
உண்மையான அன்பு !!!!

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (24-May-18, 5:02 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : kaadhal
பார்வை : 37

மேலே