சிற்றிடையாள்
அரிதாரம் பூசி அழகு பார்க்கவில்லை!
மையல் கொண்ட மன்னனுக்காய் மையிட்டுக் கொள்ளவில்லை!
மனம் நிறைய மணப்பூ சூடிக்கொள்ளவில்லை!
மங்கை அவள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள், உடல் வேறாக! அவன் உயிர் வேராக!! சொப்பனங்களின் அர்த்தமற்ற விடுகதை போல, எண்ணங்களின் முடிச்சுகளுக்குள் மயங்கிக் கிடக்கிறாள்...
உறக்கமற்ற நடுநிசியில் உயிரற்ற உணர்வுகளுக்குள் உறங்கிக் கிடக்கிறாள்...
விடுகதையின் விடையறியா வில்புருவம் அவன் வரவை நோக்கி தவமிருக்க, விடை தெரிந்தால் சிற்றிடையாள் கண் சேர்த்துவிடு என் கனவே!!