பெண் பார்க்கும் படலம் - ஒரு ஆணின் சோகக்கதை
தந்தை இறந்து விட
குடும்ப சுமைகள்
தோளில் சுமக்க வேண்டிய நிலை
சிறு வயது என்பதால்
சுமையாகத் தான் இருந்தது ....
இரு தங்கைகளுக்கும்
மணம் முடித்து வைத்த பின்
தொடங்கியது இவனுக்கான
பெண் பார்க்கும் படலம்...
சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்
மாநிறமும் அழகான முக
அமைப்பும் கொண்டவன்
அதற்கேற்றாற் போல் அலங்காரம்...
உள்ளத்தில் ஆசை பொங்க
முதல் முதலாய் பெண் பார்க்க செல்கிறான் ...
பெண்ணே கூறினாள்
எனக்குப் பிடிக்கவில்லை என்று !
காரணம் கற்றது தமிழ் ...
இப்படியாய் இரண்டு மூன்று இடங்கள்
நழுவிச் சென்றது ...
இப்போது இருவரும் ஒப்புக்கொண்டனர்
இரண்டொரு நாளில்
ஒரு தொலைபேசி அழைப்பு
எதிர் முனையில் அதே பெண்
நான் இன்னொருவரைக் காதலிக்கிறேன்
என்னால் வீட்டில் சொல்ல முடியாது
நீங்களாகவே விலகிக் கொள்ளுங்கள் என்றாள்..
மீண்டும் தொடங்கியது பயணங்கள் ...
பத்து இடங்களை தாண்டி இருக்கும்
எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க
போதும் என்றிருந்தது ...
நாள் ஆக ஆக உள்ளத்தில் ஏக்கம்
திருமண வீட்டில் ஒலிக்கும் பாடல்களை
கேட்டு எப்போது நம் வீட்டில்
இப்பாடல் ஒலிக்கும் என வேதனை கொண்டான்
இறுதியாக எந்த நிபந்தனையும்
இல்லாமல் ஒப்புக்கொண்டாள்
கணினிப்பெண்....
இனிதே தொடங்கியது
வாழ்க்கை பயணம் ...
சொல்லி முடித்தான்
தன் சோக கதையை
சிரித்துக் கொண்டே
ரசித்துக் கொண்டிருந்தாள்
அவன் மனைவி .....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
