வலி

தூத்துக்குடியில்
குடிமக்கள் இன்று
பிழியப்படுகின்றனர்
சாத்துக்குடிகளாய்

ஆலை ஓடாமல் முடிக்கச்சொன்னால்
ஆளை ஓடவிட்டு முடிக்கின்றனர்

உப்பு விளையும் பூமியில்
தப்பு விளைகின்றது

ஆலைக் கழிவுகள்
செய்கின்ற அழிவுகளை
ஆளை வைத்து செய்கின்றனர்

ஆலைக்கு உள்ளே
தங்கத்தைப் பிரித்தெடுப்பதைப்போல்
வெளியே மக்களின்
அங்கத்தைப் பிரித்தெடுக்கின்றனர்

அனைவரும் அணிந்தனர் கருப்புஆடை
மக்கள் எவ்வாறு அறிவர் அதிலுள்ள கருப்பு ஆடை

வெள்ளாடை அணிந்தவர்கள்
மக்களை வெள்ளாடுகளாய் வெட்டுகின்றனர்

மக்களின் வலியை
மை கொண்டு பத்திரிக்கை
எழுதியிருந்தால்
வலிமை அடைந்திருக்கும் போராட்டம்

போராட்டக்களம் ஆனது
போர்க்களம்
நிரம்பியது செந் நீர்க்குளம்

நச்சு ஆவி மேலே
தேசிய கொடிபோல் பறந்துகொண்டிருந்தது
கீழே மக்கள் சுகாதாரம் வேண்டி இரந்துகோண்டிருந்தனர்
இறந்த மக்களுக்காக முன்னாள் இருந்தவர்கள்
இறந்துகொண்டிதுந்தனர்
நச்சு ஆவிக்கு பதில்
அவர்களின் மூச்சு ஆவி பறந்துகொண்டிருந்தது
தேசிய கொடியாய் அல்ல
பேசிய கோடியாய்

தூத்துக்குடி சம்பவத்தை நினைத்தால்
தூ தூ எனத் துப்பத் தோன்றுகிறது

வலியோடு நிற்கும்
இவர்களை பார்த்துக்கொண்டே
முருகன் வள்ளியோடு நின்றுகொண்டிருந்தான்

ஆலையால் புற்று வரும்
என்றதற்கு
பாலை ஊற்றினீரா ?
இல்லை
சோலை பாலை
ஆகும் என்றதற்கு பாலை ஊற்றினீரா ?
உங்களால்
காவிரிக்கு வராத தண்ணீர்
மக்கள் கண்ணில் வருகின்றது ஊற்றுநீரா.

எழுதியவர் : குமார் (27-May-18, 9:01 am)
Tanglish : vali
பார்வை : 133

மேலே